Wednesday, October 17, 2012

ஈழத் தமிழர்களின் நண்பன் படையாச்சிக்கு பிரித்தானிய தமிழர் பேரவையின் இரங்கல் செய்தி


ஈழத் தமிழர்களின் நண்பன் படையாச்சிக்கு பிரித்தானிய தமிழர் பேரவையின் இரங்கல் செய்தி

 
தென்னாபிரிக்காவின் பொதுத்துறை மற்றும் நிர்வாகத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ண படையாச்சியின் இழப்பினால், தமிழ் கூறும் நல் உலகம் ஆற்றொணாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளது.
ஓர் உன்னத மனித நேயரான படையாச்சி அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காகவே தன்னை அர்ப்பணம் செய்தவர். தென்னாபிரிக்க இனவொதுக்கல் அநீதிக்கெதிராக ஆரம்பித்ததிலிருந்து இறுதி மூச்சு வரை அவரது செயற்பாடுகள் ஒடுக்கப்பட்டோரின் விடிவுக்காகவே அமைந்திருந்தன.

அடிமைப்பட்டுக் கிடக்கும் ஓரினம் எவ்வாறு தொடர்ந்து போரட வேண்டும் என்பதனை அவர் தன் அயராத வாழ்க்கை மூலம் எடுத்துக்காட்டினார்.
தன் சொந்த உடல் நிலையையும் பொருட்படுத்தாது உலகெங்கும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக உழைத்த திரு படையாச்சி தன் போராட்ட அனுபவங்களையும் உலக அரசியல் அனுபவங்களையும் தமிழ் மக்களின் விடிவு கருதி எம்முடன் பகிர்ந்து கொண்டார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் 40, 000 இற்கும் மேற்பட்ட எம்மக்கள் படுகொலை செய்யப்பட்ட போரை நிறுத்தக்ககோரி, தென்னாபிரிக்க அரசின் ஊடாக திரு படையாச்சி எடுத்த முயற்சிகளை தமிழினம் நினைவு கூருகின்றது.

ஈழத்தமிழர் விவகாரத்தை முழுமையாக உள்வாங்கி, அவர்களின் அபிலாசைகளை வென்றெடுக்க ஓர் வழிகாட்டியாக இருந்த படையாச்சி என்ற தோழரை, ஆலோசகரை தமிழீழம் இழந்து நிற்கின்றது.
படையாச்சி அவர்களை இழந்து தவிக்கும் அவரது குடும்பதினருக்கும், தென்னாபிரிக்க மக்களுக்கும் பிரித்தானிய தமிழர்பேரவை தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கின்றது.
பிரித்தானிய தமிழர்பேரவை

http://www.tamilwin.com/show-RUmqyFSUOVjtz.html

No comments:

Post a Comment