Wednesday, October 17, 2012

சட்டநாதன் குழுவின் பரிந்துரையும், திமுக வன்னியர்களை ஏமாற்றியதும் :




கருணாநிதி அவர்கள் அடிப்பட்டு தெருவில் கிடக்கும் பொது , அவரை காப்பற்றி உயிர் தந்ததும் சாரங்கப்பாணி என்னும் வன்னியர் ...

திராவிட கழகத்தை உயிர் மூச்சாக நினைத்து இன்று வரை அதை தாங்கி கொண்டிருப்பவர்களும் வன்னியர்களே . திமுக ஆட்சியை இழந்தாலும், அந்த கட்சி பெரும் ஒரு சில வெற்றிகள் கூட வன்னியர் பகுதியாகத்தான் இருக்கும் . இன்றளவும் வடதமிழகத்தில் திமுக வெறியர்களை வாழும் வன்னியர்களை காணலாம் .

திராவிடத்திர்க்காக உயிரை கொடுத்த உடையார்பாளையம் வேலாயுதம் போல பல வன்னியர்கள் உண்டு , திமுகவை அரணாக காத்தவர்கள் இவர்கள் .. ஆனால் இப்படில்லாம் உழைத்த வன்னியர்களுக்கு திமுக செய்தது என்ன தெரியுமா ?

1969 இல் கருணாநிதி முதல்வராக இருந்த போது சட்டநாதன் தலைமையில் பிர்ப்படுத்தப்பட்டோர் குழு ஒன்று அமைக்கப்பட்டது .
பிற்படுத்த பட்ட சமூகங்களின் கல்வி, வேலை வாய்ப்பு , பொருளாதார நிலைமைகளை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட அந்த குழு 1971 ஆம் ஆண்டு தனது பரிந்துரையை சமர்ப்பித்தது .


சட்டநாதன் குழுவின் பரிந்துரை :
============================

1. தமிழ்நாட்டில் பிற்படுத்த பட்ட சமூகத்திற்கு இருந்து வரும் இடஒதுக்கீட்டை 25 சதவிகிதத்தில் இருந்து 31 சதவிகிதமாக அதிகரிக்க வேண்டும் .

2. அந்த சதவிகிதத்தை இரண்டாக பிரித்து பிர்ப்படுத்தபட்டோருக்கு 15 சதவிகிதமும் வன்னியர் உள்ளிட்ட மிகவும் பிற்ப்படுத்தப்பட்டோருக்கு 16 சதவிகிதமும் இடஒதுக்கீடு செய்ய வேண்டும் .

3. பிற்படுத்தபட்டோர் பட்டியலில் இருந்து முதலியார் உள்ளிட்ட சில முன்னேறிய சாதிகளை உடனடியாக நீக்க வேண்டும் .

4. இவற்றோடு குழுவின் முக்கிய நபராக அங்கம் வகித்த நீதிபதி எஸ்.சின்னப்பன் மற்றும் எம்.பி.ஜகான் உசேன் மேலும் சில கருத்துக்களை வலியுறுத்தினார்கள் .

5. பிற்படுத்தபட்டோர் பட்டியலில் உள்ள ஒரு சில சாதியினர் நன்கு வளர்ச்சி அடைந்திருப்பதால் அவர்களை பிற்படுத்தபட்டோர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் .

6. அரசு அளிக்கும் சலுகைகள் பட்டியலில் உள்ள உயர்ந்த சாதியினரை சென்றடையாமால் கவனமாக செயல்பட வேண்டும் .

7. ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே அரசு துறை வேலை வாய்ப்பில் 86 சதவிகிதத்தை அனுபவித்து கொண்டிருக்கிறார்கள்

8. தமிழக மக்கள் தொகையில் 75 சதவிகிதம் உள்ள வன்னியர் உள்ளிட்ட 156 சாதிகள் வெறும் 14 சதவிகிதம் மட்டுமே வேலைவாய்ப்புகளை அனுபவிக்கின்றனர் .

9. இதே நிலை கல்வி துறையிலும் உள்ளது . இதை மாற்றி மிகவும் பின்தங்கியவர்களை தனியே பிரித்து அவர்களுக்கு சதவிகிதம் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் .

இதெல்லாம் வன்னியர்களின் தனிப்பட்ட கருத்தல்ல . ஆய்வு செய்து சட்டநாதன் குழு அளித்த பரிந்துரை . இதன்படி வன்னியர் உள்ளிட்ட மிக பிற்ப்பட்ட படுத்தவருக்கு 16 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்க வேண்டும் . முன்னேறிய முதலியார் போன்ற சாதிகளை பிர்ப்படுத்தப்பட்டோர் பட்டியலிலிருந்து நீக்கியிருக்க வேண்டும் .

ஆனால் இரண்டுமே செய்யப்படவில்லை . மாறாக முன்னேறிய பல சாதிகளை கொண்டு வந்து ஓட்டுக்காக பிர்ப்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தார்கள் . இதுதான் உழைப்புக்கும் தியாகத்திற்கும் கிடைத்த பரிசு .

இதன்பின் 1980 முதல் 1987 வரை நூற்றுக்கும் மேற்ப்பட்ட பேரணிகள் மாநாடுகள் எல்லாம் மருத்துவர் அய்யாவின் தலைமையில் நடந்த பின்புதான் 20 சதவிகிதம் மிகவும் பிற்படுத்த பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது .

அதுவும் வன்னியர் உட்பட 18 சாதிகளுக்கு இடஒதுக்கீடு அளிப்பதாக வாக்குறுதி அளித்துவிட்டு மேலும் 10 சதவிகித சாதிகளை கொண்டு வந்து அந்த பட்டியலில் சேர்த்து இடஒதுக்கீட்டின் பலனை வன்னியர்கள் அனுபவிக்க முடியாமல் செய்து பழி தீர்த்தார்கள் . :(:

No comments:

Post a Comment