Wednesday, October 17, 2012

மருத்துவர் அய்யாவிற்கு இந்த தொண்டனின் பிறந்தநாள் வாழ்த்து :


சத்ரிய குல திரு மகனார் ! வன்னிய குல தந்தை ! திண்டிவனம் தந்த திருவிளக்கு ! சமூக நீதி காவலர் ! பொங்கு தமிழர் தலைவா ! தமிழ்குடி தாங்கி திரு.மருத்துவர் அய்யா அவர்களின் பிறந்த இந்த நன்னாளில் உங்களை வாழ்த்த எங்களுக்கு வயதில்லை அதனால் வணங்குகிறோம் .

25.7.1939 அன்று கீழ்சிவிரி, விழுப்புரம் மாவட்டம் தந்தையார் சஞ்சீவிராயக் கவுண்டர் மற்றும் தாயார் நவநீத அம்மாள் அவர்களுக்கு திருகுமரனாய் உதித்த எங்கள் குலத்தலைவா !

உங்கள் பிறப்பே இந்த சமூகத்தின் சிறப்பு !

உடலில் உள்ள பிணியை போக்க வந்த மருத்துவர் மட்டுமல்ல நீங்கள் , இந்த சமுதாயத்தில் உள்ள குறையை நீக்கும் மருத்துவர் அய்யா நீங்கள் !

காடுகளை அழித்து கழனியாக்கி விவசாயம் செழிக்க வைத்த கௌண்டர் மட்டும் அல்ல நீங்கள், வன்னிய சமுதாயத்தின் வாழ்வை செழிக்க வைத்த கௌண்டர் அய்யா நீங்கள் !

எங்களுக்கு எந்த குறை வந்தாலும் களத்தில் தமிழர் மறப்படைக்கு தலைமை ஏற்று நிற்கும் படையாட்சியார் நீங்கள் !

எங்கள் குலத்தின் நாயகரே !
சிலை எழுபதில் கம்பர் புகழ்ந்த வன்னிய தொண்டைமானே !
வீரத்தின் விளைநிலம் நீங்கள் !
இறக்கத்தின் பெருங்கடல் நீங்கள் !

சமச்சீர் கல்விக்காக போராடி சமுத்துவம் பெற்றிட்ட சமூகநீதி காவலரே !

வள்ளல் வல்வில் ஓரி வாரிசே !

இறைவனை நான் நேரில் கண்டதில்லை , இப்போது காண்கிறேன் உங்கள் திரு உருவத்தில்.
இடஒதுக்கீடு போராளியே !

போர் சென்று வீரமரணம் அடைந்த எம் தமிழர் இனம் இன்று பார் சென்று போதையில் வீழ்கிறதே என்றெண்ணி , மதுவை ஒழிக்க தன் வாழ்நாள் முழுதும் போராடும் உங்கள் போராட்ட குணத்தை கண்டால் அந்த பண்டார வன்னியனே மீண்டும் பிறப்பெடுதானோ என்று தொன்றுகிறது !

பெரியார் பணிந்த அத்திப்பாக்கம் வேங்கடாசலம் நாயகர் வாரிசே ! ஆனைமுத்து அய்யா அரவணைத்த சமூகநீதியே !

கம்பனுக்கு கைகொடுத்து காவிரிக்கு அணை எடுத்து !
செம்பொன்னால் சிதம்பரத்து சாமிக்கொரு கூரை காத்து !
புஞ்சையில நஞ்சையில புகழ் விளையும் தஞ்சையில
புலி கொடிய ஏத்தி வச்சி புகழ் கொடிய பறக்க விட்டு !
ஈழநாட்டு எல்லை வர எசையோடு ஆண்டு வந்த
சோழநாட்டு மன்னருங்க சந்ததியில் வந்தவரே
கவிஞர் வாலி புகழ்ந்து பாடிய வன்னிய வம்சத்தின் வேந்தர் அய்யா நீங்கள் !

தன்னை அக்னி குல சத்ரியன் என்றுரைத்த சேர மன்னன் குலசேகரனே !
வன்னியர் மானம் காத்த மழவராயரே !

சேர வம்சம் (அரியலூர் மழவராயர், குலசேகரன், ),
சோழ வம்சம் (பிச்சாவரம் சோழனார் ),
பல்லவ வம்சம் (உடையார்பாளையம் ஜமீன், முகாசா பரோர்ர் கச்சிராயர் , திருவண்ணாமலை சம்புவராயர், காடவராயர் , பல்லவராயர்,கருணாகர தொண்டைமான் ),
பாண்டியர் வம்சம் (சிவகிரி, ஏழாயிரம் பண்ணை , பன்னீராயிரம் பண்ணை, அழகாபுரி ,சமுசிகாபுரம், வேப்பங்குளம், ஆத்துப்பட்டி ஜமீன்கள் ), இலங்கையாண்ட பண்டார வன்னியர் ,
கீழ்சாளுக்கியர் (வன்னிய குல திகளர் )
என்று இந்ததென்னிந்திய வன்னிய மன்னர்குல தலைவன் நீங்கள் .

நீங்கள் இல்லையேல் தமிழருக்கு பெருமை இல்லை .

வாழ்க்கையில் எந்த இடத்திற்கு நீங்கள் உயர்ந்தாலும் , நீங்கள் ஒரு விவசாயி என்பதை மறவாமல் உங்கள் பிறந்தநாளான இன்று ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு அழைத்துள்ளீர் . உங்கள் ஆணையை சேவை என நினைத்து செய்ய தயாராக உள்ளோம் இந்த பாட்டாளி வர்க்கம் . இதைவிட வேறென்ன பாக்கியம் வேண்டும் எங்களுக்கு .

சேர குல செம்மல்
சோழ குல வளவன்
பல்லவ குல வர்மன்
சாளுக்கிய குல கீர்த்தி
தன்னலமில்லா அதியன்
வள்ளல் வழி ஓரி
வன்னிய குல விளக்கம்
எங்கள் இன தெய்வம்
மருத்துவர் அய்யா வாழிய! வாழிய!!வாழியவே!!!

இன்று எங்கள் குல வழிகாட்டி பிறந்தவிழா. இதுவே எம்மினத்திற்கு வசந்தவிழா ! 

பசுமை தாயகமே எங்கள் தமிழகமே நீர் வாழ்க பல்லாண்டு ....

No comments:

Post a Comment