Wednesday, October 17, 2012

அம்பாசங்கர் குழுவின் பரிந்துரையும், எம்ஜிஆர் அவர்கள் வன்னியர்க்கு இழைத்த துரோகமும் :






வடதமிழகத்தில் எம்ஜிஆருக்கு ஆதரவு இல்லாத நேரத்தில் எம்ஜிஆரை அழைத்து வந்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் முதல் மாணவரணி நாத்தி காட்டியவர் வன்னியரான வல்லம்படுகை பாலசுந்தரம் . இவரது தீவிர செயல்பாட்டின் காரணமாக திமுக மாணவர் அணியை சாரந்தவர்களால் , அதே மண்ணில் வெட்டி சாய்க்கப்பட்டார்...

....... 1972 இல் திமுகவை விட்டு எம்ஜிஆர் அவர்கள் வெளியேற்றப்பட்ட போது, திமுகவினரோடு எழுந்த அரசியல் விரோதத்தில் வெட்டி கொல்லப்பட்டவர் சுகுமாரன் . இவர் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர் .

அப்போது இவரின் உயிர் தியாகம் எம்ஜியாரின் அரசியல் வாழ்வுக்கு அடித்தளமாக அமைந்தது என்று சொல்லலாம் .

சுகுமாரன் கொலையுண்ட சுவரொட்டி புகைப்படங்களை ஊரெங்கும் ஒட்டிதான் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது .

ஆனால் இந்த தியாகங்களுக்காக எல்லாம் எம்ஜிஆர் வன்னியர் இனத்திற்கு பெரிதாக எதுவும் செய்து விடவில்லை . மாறாக, தருமபுரி , வடார்க்காடு , திருப்பத்தூர் பகுதிகளில் காவல்துறை அதிகாரிகளை கொம்புசீவி விட்டு பல வன்னிய இளைஞசர்களை நக்சலைட்டுகள் என்ற பெயரில் சுட்டு கொள்ள செய்தார் .
==================

இதுதவிர அம்பாசங்கர் குழு அளித்த பரிந்துரையை நடைமுறை படுத்தாமல் கிடப்பில் போட்டதும் தான் எம்ஜிஆர் அரசுதான் .

இந்த குழு மருத்துவர் அய்யாவின் கோரிக்கையை ஏற்று 1982 இல் அமைக்கப்பட்டது.

அதற்க்கு முன் இருபது கோரிக்கையை கொண்ட கருத்துகளை முன்வைத்தார் மருத்துவர் அய்யா .

• வன்னியர்கள் பெரும்பாலும் கிராமங்களில் வசிப்பதால் அரசின் சலுகைகள் முழுவதுமாக அவர்களை சென்றடைவதில்லை .

• 95 சதவிகிதம் வன்னியர்கள் ஏழ்மை நிலையில் கூலித்தொழிலாளியாக இருப்பதாலும், கல்வியின் முக்கியத்துவம் அறியாததாலும் அவர்களது குழந்தைகளும் , கல்வி அறிவு பெற முடிவதில்லை .

• பிற்படுத்தப்பட்டோருக்கான கல்வி உதவித் தொகை பெரும் ஆண்டு வருமானத்தை 12,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் .

• இடஒதுக்கீடு முறையானது அனைத்து துறைகளிலும் பின்பற்ற படவேண்டும் .

• பிற்படுத்தப்பட்டோருக்கான சதவிகித இடஒதுக்கீட்டை மக்கள் தொகை கணக்கீட்டின் அடிப்படையில் பிரித்து வழங்கினால்தான் வன்னியர்கள் பலன் அடைய முடியும் .

• வன்னியர்களுக்கென்று தனி வாரியம் அமைத்து அவர்கள் நலனை மேம்படச் செய்ய வேண்டும் .

• சேலம், செங்கல்ப்பட்டு போன்ற மாநகராட்சிகளில் வன்னியர்கள் துப்புரவு தொழிலாளர்களாகவும் , திருநெல்வேலி போன்ற மாவட்டத்தில் இன்னும் கீழ் நிலை வேலைகளையும் அவர்கள் செய்து வருகிறார்கள் . இவர்களை அடையாளம் கண்டு அவர்களின் புணர் வாழ்விற்கு அரசு உதவிட வேண்டும் .

• வன்னியர்கள் பெரும்பாலும் வசிக்கும் பாராளுமன்ற -சட்டமன்ற தொகுதிகள் இன்றளவில் தனித் தொகுதிகளாக உள்ளன .

• அதை ரத்து செய்வதின் மூலம் பெருமான்மை வன்னிய சமுதாய மக்களின் கோரிக்கைகள் , பாராளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் ஒலித்திட வகை செய்திட வேண்டும் .

என்பது போன்ற இருபது கருத்துக்கள் அடங்கிய கோரிக்கைகளை நம் மருத்துவர் அய்யா முன்வைக்க அம்பாசங்கர் குழு அதை கனிவுடன் பரிசீலித்து மூன்று ஆண்டுகள் ஆய்வு செய்த பின் 1985 ஆம் ஆண்டு தனது பரிந்துரைகளை அப்போதைய முதல்வர் எம்ஜியாரின் முன் வைத்தது .

தமிழகத்தை பொறுத்த வரையில் , பெரும்பான்மை சமூகமாக வாழ்வது வன்னியர்கள் என்றும், இவர்களில் பெரும்பான்மையான மக்கள் குத்தகைக்கு பயிர் செய்து செய்தல் , நெசவு, மரம் வெட்டுதல் , கல் உடைத்தல் , சாலை போடுதல் , வண்டி ஒட்டுதல் போன்ற ஏழ்மையான நிலையில் உள்ளனர் என்றும் அவர்கள் வாழ்வை மேம்படுத்த வேண்டும் என்றும் அந்த அம்பாசங்கர் அறிக்கை குறிப்பிடிருந்தது.

சட்டநாதன் குழுவை போல இந்த குழுவும், பிற்படுத்த பட்டோர் பட்டியலில் சில சாதிகள் நன்கு முன்னேறிய சாதிகள் என்றும், அவைகளை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டது .

வன்னியர்கள் அனைத்து துறைகளிலும் பின்தங்கி இருப்பதால், அவர்களை மிகவும் பிற்படுத்த பட்டோர் என்று அறிவித்து இவர்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது .

ஆனால் சட்டநாதன் குழுவின் பரிந்துரையை கிடப்பில் போட்டு கருணாநிதி துரோகம் செய்தது போல, எம்ஜியாரும் அம்பாசங்கர் குழுவின் பரிந்துரையை கிடப்பில் போட்டு தன் பங்கிற்கு வன்னியர்களுக்கு துரோகம் செய்தார் .

இதனால் எந்தவித முன்னேற்றமும் அடையாமல் இருந்தது வன்னிய சமுதாயம் . :(

இதுதான் எம்ஜியாருக்காக உயிர் நீத்த வன்னிய சமுதாயத்தினருக்கு இவர் ஆற்றிய நன்றி கடன் .

No comments:

Post a Comment