Wednesday, October 17, 2012

அண்ணாதுரை அவர்களின் துரோகம் :



திமுக தொடங்கி 1967 ஆம் ஆண்டு 138 தொகுதிகளை வென்று ஆட்சி அமைத்தது . அதுவரை திமுக வெற்றி பெற்ற தொகுதிகளில் பெரும்பான்மையாக வன்னியர் தொகுதிகள்தான் . திமுகவின் செல்வாக்கு இன்றளவும் வன்னியர் பகுதியான வடதமிழ்நாடு என்றால் அது மிகையாகாது .

அப்போது அண்ணா அவர்கள் "நாடாளும் தகுதியும் திறமையும் இருந்தும் கூட வன்னிய இனம் வாய்ப்புகள் கிடைக்காமல் இலவுக்காத்த கிளியாகவே இருக்கிறது என்றும் பெரும்பான்மை இனமாக இருக்கும் வன்னிய இனத்துக்கு காங்கிரஸ் கட்சி உரிய பிரதிநிதித்துவத்தை அளிக்கவில்லை என்றும் " காங்கிரசை வசைபாடினார் அண்ணா .

ஆனால் அவர் ஆட்சி அமைத்த பொது கூட வன்னிய இனத்திற்கு அந்த பிரதிநிதித்துவத்தை தரவில்லை என்பதுதான் வரலாறு சொல்லும் உண்மை .

ஆம் , அண்ணாதுரை மந்திரிசபை அமைத்த போது, தன் முதலியார் இனத்தை சேர்ந்த நான்கு பேருக்கு அமைச்சர் பதவி தந்துவிட்டு உதயசூரியன் சின்னத்தை தந்து உதவியதற்காக ஏ.கோவிந்தசாமி என்ற ஒரே ஒரு வன்னியரை மட்டும் அமைச்சராக்கினார் .

எதிர்க்கட்சியாக இருந்த போது வன்னியர்கள் மீது காட்டிய பரிவு , ஆளும்கட்சி ஆனபோது இல்லாமல் போனது ஏன் என்று கேள்வி கூட கேட்க்க தெரியாமல் தொடர்ந்தும் வன்னியர்கள் திமுகவை தாங்கும் தூண்களாகவே இருக்கிறார்கள்
========================


எம்ஜிஆர் அவர்கள் திமுகவை விட்டு விலகி தனி கட்சி துடங்கிய போதும், வன்னியர்கள்தான் திமுகவை தாங்கி நின்றார்கள் . 1977 ஆம் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று எம்ஜிஆர் முதலமைச்சர் ஆனார் . அப்போது திமுக சட்டமன்ற தொகுதியில் 48 மட்டும்தான் வெற்றி பெற்றது . அப்போதும் அதில் 41 தொகுதிகள் வன்னியர்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளே .வைகோ அவர்கள் திமுகவை விட்டு பிரிந்து சென்ற போது ஏற்ப்பட்ட அரசியல் சரிவையும் சரி செய்து தூக்கி நிறுத்த கருணாவிற்கு உதவியது நம் மருத்துவர் அய்யாவும் அவர் பின்னால் இருக்கும் வன்னிய இனம்தான் .

No comments:

Post a Comment