Wednesday, October 17, 2012

25 இலட்சம் வன்னியர் பங்கேற்ற வன்னியர் சித்திரை திருவிழா 2012



செய்தியை அளித்ததற்கு நன்றி  :

http://www.thepmk.net/2012/05/20.html

http://giramaththan.blogspot.com/2012/05/5-25.html?spref=fb



வன்னியர் சங்கம் தொடங்கிய அந்த நாள் ஞாபகம்-இந்த நாள் வந்ததே...


மருத்துவர் அய்யா மாகபலிபுரத்தில் நடந்த மாநாட்டில் பூரிப்புடன் கூறிய பதிவு தான் இந்த வார்த்தை.......
 

அன்று உலகத்தையே அதிர வைத்தது பல வருடங்களுக்கு முன் நடத்த இடஓதுக்கீடு போரட்டம்..
 


இன்று உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தது மே-5 நடந்த வன்னியர் இளைஞர் பெருவிழா...
 

கூட்ட நெரிசல்.வகன நெரிசல் என நம் மக்கள் அவதிப்பட்டாலும்..ஒரு சிறு பிரச்சினை கூட நடக்காமல் வன்னியர்கள் அனைவரும் அமைதிக்கும்...ஒழுக்கத்திற்க்கும் கட்டுபட்டவர்கள் என்பதை உலகிற்க்கு உணர வைத்தது இவ் வன்னியர் பெரு விழா என்றால் அது மிகையாகது..
 

ஓர வைஞ்சனையினுடன் செயல்பட்ட காவல் துறை.
 கூட்டத்தை கட்டுபடுத்தவோ...வாகனநெரிசலை சரி செய்யவே காவல் துறை எந்த நடவடிக்கையை எடுக்காதது வருத்தமளித்தாலும்...எந்த இடைஞ்சலும் இல்லாமல் நம் உறவினர்கள் மாநாட்டை கண்டுகளித்தனர்..

இங்கு உங்களுக்காக கூட்டத்தின் ஒரு சில பகுதி புகைப்படங்கள்..









































பாட்டாளி மக்களின் உரிமைகளை மீட்டெடுத்தல் மற்றும் அவர்களின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை வகுப்பதற்காக வன்னியர் சங்கத்தின் சார்பில் மாமல்லபுரத்தில் நேற்று சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாடு நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி ஆகியோர் பேசினார்கள். வன்னியர் சங்க மாநில தலைவர் ஜெ.குரு, பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய மந்திரிகள் ஏ.கே.மூர்த்தி, வேலு , வழக்கறிஞர் பாலு உள்பட கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

RMU_2360
மருத்துவர் அய்யா அவர்கள் பேசியதாவது:-
விழாவின் இறுதியில் மருத்துவர் அய்யா பேசுகையில், பாட்டாளி மக்கள் கட்சி மாபெரும் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்தார். அதுகுறித்து அவர் கூறியதாவது:-DSC_4630
வன்னியர் பரம்பரைதான் நாடாண்ட பரம்பரை. எங்கோ இருந்தவர்கள் நம் நாட்டை ஆண்டுகொண்டிருக்கிறார்கள். நாம் மீண்டும்  நாட்டை ஆளவேண்டும். இப்போது இலவசங்களை கொடுத்து நாட்டை சின்னாபின்னமாக்கி விட்டார்கள். 45 ஆண்டுகளாக ஆட்சியை நடத்திய திராவிட கட்சிகளுக்கு ஆள தகுதி இல்லை.இந்த நிலைமை மாற நாம் மீண்டும் ஆட்சியை பிடிக்கவேண்டும். இதற்காக எந்த தியாகமும் செய்ய தயாராக இருக்கிறோம். 
1987-ம் ஆண்டுRMU_2390செப்டம்பர் மாதம் 17 முதல் ஒரு வார காலம் பாட்டாளி மக்கள் கட்சி தொடர் சாலை மறியல் போராட்டம் நடத்தியது. வன்னியர்கள் யார் என்பதை உலகுக்கு அடையாளம் காட்டிய போராட்டம் அது. 21 பேர் தங்களது இன்னுயிர்களை தியாகம் செய்த போராட்டம் அது. அந்த போராட்டத்தை, அந்த போராட்டத்தின் நியாயத்தை அமெரிக்காவில் இருந்து வெளியாகும் நியுயார்க் டைம்ஸ் பத்திரிகை கால் பக்கத்துக்கு செய்தியாக வெளியிட்டு சிறப்பித்து இருந்தது. அந்த அளவுக்கு முக்கியமான போராட்டமாக அது அமைந்தது. ஆனால் இங்கே உள்ள பத்திரிக்கைகள் கேவலமாக எழுதின.
RMU_2340
அது போன்ற ஒரு போராட்டத்தை, வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கேட்டு, போராட்டம் நடத்த பாட்டாளி மக்கள் கட்சி முடிவு செய்து உள்ளது. அப்படியொரு போராட்டத்தை மீண்டும் பாட்டாளி மக்கள் கட்சி நடத்தினால் தமிழகம் தாங்குமா?
எங்கள் இளைஞர்கள் போராட தயாராக இருக்கிறார்கள். அவர்களை என்னாலேயே கட்டுப்படுத்த முடியாது. தமிழக சிறைகளை நிரப்ப லட்சக் கணக்கான பாட்டாளி இளைஞர்கள் தயாராக இருக்கிறார்கள். நாங்கள் சிறை செல்ல தயங்க மாட்டோம். நானும் ஒரு வருடம் சிறையில் இருக்க தயார். ஆகவே நாங்கள் போராட்டம் அறிவிப்பதற்கு முன்னதாக வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீட்டை அறிவியுங்கள். அல்லது ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் எந்த மாதிரியான போராட்டம்? எப்படி அந்த போராட்டத்தை நடத்துவோம் என்று அறிவிப்போம்.
இவ்வாறு மருத்துவர் அய்யா பேசினார்.


786_9858

தீர்மானங்கள்
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
தமிழ்நாட்டில் பெரும்பான்மை சமுதாயமான வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். அதேபோல் முதலியார், முக்குலத்தோர், கொங்கு வேளாளர், நாடார், நாயுடு, யாதவர், செட்டியார் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிறப்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கும் அவரவர் மக்கள் தொகைக்கு ஏற்ற வகையில் தனி இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று தமிழக அரசை இந்த மாநாடு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது. மத்திய அரசில் வன்னியர்களுக்கு 2 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். 

* வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தியும், இந்த கோரிக்கையில் உள்ள நியாயத்தை மக்களுக்கு விளக்கவும் முன்பு நடத்தப்பட்டது போல் தொடர் போராட்டங்கள் வருகிற ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் நடத்தப்படும். போராட்டத்தின் வடிவம் மற்றும் தேதியை டாக்டர் ராமதாஸ் பின்னர் முடிவு செய்து அறிவிப்பார். 

சாதிவாரி கணக்கெடுப்பு 

* மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்புக்கு பதில் சமூக, பொருளாதார, சாதி கணக்கெடுப்பை தற்போது நடத்தி மக்களை ஏமாற்றி வருகிறது. இது உண்மையான சாதிவாரி கணக்கெடுப்பு அல்ல. இதன் விவரங்கள் எதுவும் வெளியிடப்படாது. தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 13.7.2010 அன்று தீர்ப்பளித்த உச்சநீதி மன்றம், தமிழ்நாட்டில் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி அதன் அடிப்படையில் இடஒதுக்கீட்டின் அளவை நிர்ணயிக்கும்படி தமிழக அரசுக்கு ஆணையிட்டது. எனவே தமிழ்நாட்டில் உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் சிற்றூர் நிர்வாக அதிகாரிகளை கொண்டு குறைந்த செலவில் மிக குறுகிய காலத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த முடியும் என்பதால் அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக தொடங்க வேண்டும்.
மதுவிலக்கு 

* மது விற்பனையால் அரசின் வருமானம் அதிகரித்தாலும், லட்சக்கணக்கான குடும்பங்கள் அழிவதை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளின் விற்பனை நேரத்தை படிப்படியாக குறைத்து முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை இந்த மாநாடு வலியுறுத்துகிறது. 

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நன்றி  :

http://www.thepmk.net/2012/05/20.html

http://giramaththan.blogspot.com/2012/05/5-25.html?spref=fb

2 comments:

  1. Thanks for sharing the informative post! and know the well educated grooms and brides profiles in iyer grooms in Chennai and all over Tamil Nadu. Free Registration!

    ReplyDelete